பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'வாரிசு. தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகியுள்ள இப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளதாக அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் படத்தின் பிரஸ் மீட்டின் போது அறிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் தனது 'வாரிசுடு' படம் எந்த ஒரு படத்திற்கும் போட்டியல்ல. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுடன் இந்தப் படம் போட்டியில்லை. தெலுங்கு திரையுலகத்தினரின் ஆலோசனைப்படி படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிடுகிறோம் என்று கூறினார்.
தெலுங்கில் நேரடிப் படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்கள் தர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை எழுந்து வந்தது. பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் முதல் சில நாட்கள் நல்ல வசூலைப் பெறும் நிலையில் 'வாரிசுடு' படத்தின் வெளியீட்டை தில் ராஜு தள்ளி வைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' படம் ஜனவரி 13ம் தேதியும் வெளியாக உள்ளது.
'வாரிசுடு' படம் ஜனவரி 14ம் வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் 'துணிவு' படத்தின் டப்பிங்கான 'தெகிம்பு' படம் ஜனவரி 11ம் தேதியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.