நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு தமன்னா ஹீரோயினாக ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் மாதத்தோடு படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் இயக்குனர் நெல்சன் திட்டமிட்டு இருக்கிறார்.
அதோடு ஏப்ரலில் இசை வெளியீட்டு விழா நடத்துவதோடு, படத்தின் டீசரையும் வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அவர் நடிக்கும் படப்பிடிப்பு ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஜெயிலர் பட வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.