நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களை அடுத்து பா .ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் அவருடன் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் விக்ரம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இது குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தங்கலான் படத்தில் விக்ரமுக்கு மேக்கப் போடுவதற்கு ஒவ்வொருநாளும் நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதையடுத்து அந்த கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி கதாபாத்திரத்தோடு ஒன்றி உணர்வுப்பூர்வமாக நடித்து வருகிறார்.
அதனால் இந்த தங்கலான் படம் விக்ரம் கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்க வயலில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.