முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : ஜன.,20 முதல் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! |

‛தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்கி உள்ள வெப் தொடர் பார்சி. இதில் விஜய்சேதுபதி, ஷாஹித் கபூர், கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் வருகிற பிப்ரவரி 10ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர். கார்பரேட் நிறுவனங்களை எதிர்த்து நிற்கும் ஒரு தெருக்கூத்து கலைஞனின் கதை. இதில் தெருக்கூத்து கலைஞனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே கூறியதாவது: தி பேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளினூடே பயணித்துப் படமாக்கியுள்ளோம். அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும் கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது.
தி பேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம். பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகவிருக்கும் தொடருக்கு மக்கள் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம் என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள். ஹிந்தியில் தயாராகி உள்ள இந்த தொடர், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியாகிறது.