அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் |
பாகுபலி, பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி கடந்தாண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். 1000 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் சாதனை செய்தது. 2023 ஆஸ்கர் விருது போட்டிக்கு நேரடியாக கலந்து கொண்டுள்ளது. அதோடு ஜனவரி கோல்டன் குளோப் விருது வழங்கும் பிரவிலும் இப்படம் இரண்டு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே ஆர்ஆர்ஆர் படத்தை ஜனவரி ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய ஐ-மேக்ஸ் ஸ்கிரீனில் இந்த படம் ஸ்பெஷலாக திரையிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், எம்.எம்.கீரவாணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.