பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! |
‛கனெக்ட்' படத்திற்கு பிறகு ஜவான், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா, அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள் நயன்தாரா. அப்போது அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து அனைத்து மக்களுக்கும் தான் கொண்டு சென்ற பரிசுப் பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கணவருடன் திரும்பி இருக்கிறார் நயன்தாரா. இதுகுறித்து வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.