அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் பிரமோசன்கள் பெரிய அளவில் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு அதில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற வாரிசு படத்தின் இசை விழாவிலும் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய். இதன் காரணமாகவே வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் துணிவு படத்தின் புரமோஷன்களும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சில பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை வருகிற ஜனவரி 1ம் தேதி சென்னையில் நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் இயக்குனர் எச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அஜித் குமாரை பொறுத்தவரை தான் நடித்த எந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், வழக்கம்போல் இந்த முறையும் மிஸ்ஸிங்தானாம்.