33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எப்-1 மற்றும் கே ஜி எப்- 2 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே கே ஜி எப் -3 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அது குறித்து அப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், கே ஜி எப் -3 படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் நீல் ஏற்கனவே தயார் செய்து விட்டார். அந்த கதையில் யஷின் இளமைக்காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறும். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை தொடங்க இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.