அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் |
2022ம் ஆண்டின் கடைசி வாரத்திற்குள் நுழையப் போகிறோம். முந்தைய இரண்டு ஆண்டுகள் கொரானோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டதால் அதிக அளவிலான படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை. 2020ம் ஆண்டு தியேட்டர்களில் சுமார் 85 படங்களும் , 2021ம் ஆண்டு தியேட்டர்களில் சுமார் 140 படங்களும் வெளியாகின. ஆனால், இந்த 2022ம் வருடத்தில் இன்று வரையில் சுமார் 187 படங்கள் வரை வெளியாகி உள்ளன.
அடுத்த வாரத்தில் மட்டும் சுமார் 8 படங்கள் வரை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 29ம் தேதி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படமும், டிசம்பர் 30ம் தேதி “அருவா சண்ட, கடைசி காதல் கதை, ஓ மை கோஸ்ட், ராங்கி, செம்பி, டிரைவர் ஜமுனா, தமிழரசன்” ஆகிய படங்களும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக கடைசி வாரத்தில் அதிகமான படங்கள் வெளியாவது வழக்கம்.
கடந்த 2021ம் வருடத்தின் கடைசி வாரத்தில் மட்டும் சுமார் 15 படங்கள் வெளியாகின. அவற்றுடன் ஒப்பிடும் போது இதுவரையில் இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்களின் எண்ணிக்கை குறைவுதான். 2023 பொங்கலுக்கு 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால், அதற்கு முன்பாக தியேட்டர்கள் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. எனவே, அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் பல தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். கடைசி நேரத்தில் எந்த மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம். படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும் வரை எதிலும் உறுதியில்லை.