பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான கைகலா சத்யநாராயணா வயது மூப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார், அவருக்கு வயது 87.
வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தெலுங்குத் திரைப்படங்களில் நடித்தவர் சத்யநாராயணா. அவரது மறைவு தெலுங்குத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கவுட்டராம் என்ற ஊரில் 1935ம் ஆண்டு பிறந்தவர். 'சிப்பட்டி குத்துரு' என்ற படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமானார்.
மறைந்த தெலுங்கு நடிகர் என்டிஆர், சத்யநாராயணாவின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கினார். பின்னர் அவர் என்டிஆருக்காக 'டூப்' ஆகவும் கூட நடித்துள்ளார். சுமார் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். 2019ம் ஆண்டு வெளிவந்த 'மகரிஷி' திரைப்படம்தான் அவர் நடித்த கடைசிப்படம்.
தமிழில் கமல்ஹாசன், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பஞ்ச தந்திரம்' படத்தில் ஸ்ரீமன் மாமனாராக நடித்தவர். 'சின்ன கல்லு பெத்த லாபம்' என்ற வசனம் பேசி படத்தில் கலகலப்பூட்டியவர்.