Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுமுகங்களின் படத்திற்கு பாடல் எழுதிய தலைமை செயலாளர் இறையன்பு

21 டிச, 2022 - 03:45 IST
எழுத்தின் அளவு:
Chief-Secretary-Iraianbu-wrote-the-song-for-the-film-Beauty

ஓம் ஜெயம் தியேட்டர் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'பியூட்டி'. ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து தயாரித்திருக்கிறார் ஆர்.தீபக்குமார். இலக்கியன் இசை அமைத்துள்ளார். கோ.ஆனந்த சிவா இயக்கி உள்ளார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே 'சைக்கலாஜிகல் லவ் த்ரில்லராக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்த படத்தில் தலைமை செயலாளர் இறையன்பு இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். “எத்தனை அழகை அத்தனை நாட்கள் எங்கே பதுக்கி வைத்தாய்?!” என்ற பாடல், காதலர்களின் காலர் ட்யூனாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், இந்தப் பாடல் மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பியூட்டி என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி சினிமாவை அழித்து விடும்: அடூர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கைஓடிடி சினிமாவை அழித்து விடும்: அடூர் ... வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‛சபரி' படப்பிடிப்பு நிறைவு வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)