புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார் 2' படம் கடந்த வாரம் உலக அளவில் வெளியானது. 'அவதார்' படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது அதுவரை வெளிவந்த ஹாலிவுட் படங்களின் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்தது. அப்போது சுமார் 240 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அப்படம் பெற்றது.
'அவதார் 2' படத்தின் முதல் வார வசூல் சுமார் 435 மில்லியன் யுஎஸ் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.3500 கோடிக்கும் அதிகம்) என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 'அவதார் 2' படம் கொரானோவுக்குப் பின் வெளிவந்த ஹாலிவுட் படங்களின் முதல் வார வசூலைப் பொறுத்தவரையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' படம் 600 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்திலும், 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படம் 442 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.
அதே சமயம் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் 'அவஞ்சர்ஸ் என்ட் கேம்' படம் முதல் வார வசூலாக 1223 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. 'அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' 640 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் 2ம் இடத்திலும், 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' 600 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து 3ம் இடத்திலும் உள்ளன.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'அவதார் - த வே ஆப் வாட்டர்' படம் முதல் வார வசூலாக 435 மில்லியன் யுஎஸ் டாலர் பெற்று 11வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.