ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

விஜய் நடிப்பில் இந்தாண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ளஇ இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் திரைக்கதை எழுதும் பணிகளை லோகேஷ் கனகராஜ் கனகராஜ் முடித்துவிட்டாகவும் இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை வருகிற டிசம்பர் 5ம் தேதி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




