தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா |
கமல் நடித்த விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் தான் புதிதாக இயக்கும் படங்களில் முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை இணைத்து தனது மாறுபட்ட படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் 67வது படத்தின் அறிவிப்பினை கமலின் விக்ரம் படத்தை போலவே ஒரு டீசர் மூலம் அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். விக்ரம் படம் தொடங்குவதற்கு முன்பு, ஆரம்பிக்கலாங்களா... என்ற வார்த்தை இடம்பெற்ற ஒரு டீசர் வெளியானது. அதேபாணியில் விஜய் 67 பட டீசரும் வெளியாக உள்ளது. அதன் காரணமாக வருகிற திங்கள்கிழமை முதல் விஜய் 67வது படத்தின் அறிவிப்பு டீசருக்கான படப்பிடிப்பை நடத்துகிறார் லோகேஷ். இந்த படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார்.