நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அதையடுத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கினார். இதில் சீமராஜா, எம்ஜிஆர் மகன் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கூறியபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.