துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'மப்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகாப்பட்டினம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்று வந்தது. இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி சிம்பு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.