பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கார் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

ஹிந்தியில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதூண். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மூன்று தேசிய விருதுகளை பெற்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்று இருந்தார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது தியாகராஜனே தனது மகன் பிரசாந்தை வைத்து இருக்கி உள்ளார்.
இப்படத்தில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இப்படத்தை திரையில் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். அதோடு இப்படத்தின் இரண்டு போஸ்டர்களையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.