சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
விஜய் டிவி நடிகையான ரித்திகா தமிழ்செல்வி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி வருகிறார். தமிழ் சின்னத்திரை உலகில் ரித்திகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் என்கிற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் க்ரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை ரித்திகா காதலித்து வந்ததாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ரித்திகா - வினுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் வருகிற 27ஆம் தேதியன்று சென்னையில் வைத்து நடைபெற உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.