'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சிம்பு நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வெந்து தணிந்தது காடு'. இதில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் சித்தி இத்னானி. இவருடைய அழகான சிரிப்புக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இவர் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி, சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். சித்தி இத்னானி இந்த செயலை பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.