ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
ரா கிரியேஷன்ஸ் மற்றும் ப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் எம்.பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பாண்டிய வம்சம்'. கதை திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் ஏ. சிவபிரகாஷ். இதில் நாயகியாக ரக்ஷிதா பானு மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். முழு நீள வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி சரவணன் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார், கண்ணதாசன் செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சிவபிரகாஷ் கூறியதாவது: இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மட்டுமல்லாது இந்த சமுதாயத்துக்கு தேவையான சில முக்கிய விஷயங்களையும் பதிவு செய்துள்ளோம் என்றார்.