கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஹாலிவுட் படம் ‛அவதார்'. 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் அதை விட 20 மடங்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை. ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
சயின்ஸ் பிக்சன் படமான இதில் கிரகங்களுக்கு இடையில் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் இந்த உலகில் வாழும் பேராசை பிடித்த மனிதனுக்கும் இயற்கையோடு இணைந்து வாழும் மற்றொரு கிரக மனிதர்களுக்கும் இடையிலான மோதலை சொன்ன விதத்தில் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக மேலும் சில பாகங்கள் வெளிவர உள்ளன.
இதன் இரண்டாம் பாகமான 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் கடந்த மே மாதம் வெளியானது. இன்று(நவ., 2) மாலையில் டிரைலரை வெளியிட்டனர்.
முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு பல ஆச்சர்யங்கள் இந்த டிரைலரில் உள்ளன. பிரமாண்டம் உருவாக்கம், ஆச்சர்யப்பட வைக்கும் காட்சி அமைப்புகள், ஆழ்கடல் அதிசயங்கள், அதில் வாழும் உயிரினங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மிக்க வைக்கின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் டிரைலரை பாராட்டி வருகின்றனர். அவதார் 2 டிரைலர் வெளியீட்டிற்கு படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.