'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் தனது நடனத்தாலும், நடிப்பாலும் பெயர் பெற்றவர் நடிகை எல் விஜயலட்சுமி. பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் நடித்த 'குடியிருந்த கோயில்' படத்தில் இடம் பெற்ற 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்..' என்ற பாடலுக்கு நடனமாடியவர் என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். “சுமை தாங்கி, என் கடமை, ஆயிரத்தில் ஒருவன், பஞ்சவர்ணக் கிளி, காக்கும் கரங்கள், வல்லவன் ஒருவன், மகா கவி காளிதாஸ், ஊட்டி வரை உறவு” என அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை.
தெலுங்கில் மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான என்டிஆருடன் 80 படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை எல் விஜயலட்சுமிக்கு என்டிஆர் நூற்றாண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எல் விஜயலட்சுமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அவரைப் பற்றிப் பாராட்டிப் பேசினார் பாலகிருஷ்ணா. 1959 முதல் 1969 வரை 100 படங்களில் நடித்த விஜயலட்சுமி என்டிஆருடன் மட்டும் 80 படங்களில் நடித்துள்ளார். இந்த விருது பெருவதற்காக அமெரிக்காவிலிருந்து ஐதராபாத் வந்து பெற்றுக் கொண்டார் விஜயலட்சுமி.
1969ல் தனது சகோதரரின் நண்பரைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியபோது விஜய லட்சுமி பத்தாவது படிப்பைக் கூட முடிக்கவில்லை. அதன் பிறகு தனியாகத் தேர்வு எழுதி பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் படித்து பட்டம் பெற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டில் சில காலம் வாழ்ந்த பிறகு அதன்பின் அமெரிக்காவிற்கச் சென்று செட்டிலானார். அங்கு ஆடிட்டிங் படிப்பை படித்து முடித்து விர்ஜினியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது அக்கவுண்டசி படிப்பை ஓய்வு நேரங்களில் கற்றுத் தருகிறார் 80 வயது ஆன எல் விஜயலட்சுமி.
அதனால்தான், பாலகிருஷ்ணா பேசுகையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாக எதிர்கால சந்ததியினருக்கு விஜயலட்சுமி முன்னுதாரணமாய் இருக்கிறார் எனப் பாராட்டினார்.