2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சமீபகாலமாக கன்னடத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் கடந்த 20 வருடங்களில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 20வது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். கன்னடத்திலேயே படங்களை இயக்கி வந்தாலும் இவர் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பிறந்தவர். கொன்றால் பாவம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார்.
இது 2018ல் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆ காராள ராத்திரி' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. திரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தின் கதை இப்போதும் சொல்லக்கூடிய, தமிழுக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருப்பதால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார் தயாள் பத்மநாபன். அதேசமயம் தமிழுக்காக சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளதுடன் கன்னடத்தில் பெற்ற அதே வெற்றியை இங்கேயும் இந்த படம் பெற்றுத் தரும் என நம்புகிறார்.