இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளாராம். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. போனி கபூர் தயாரிக்க, வரும் பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் முன்னோட்ட நிகழ்வில் நடிகர் அஜித் குமார் கலந்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. அஜித் கலந்துகொண்டால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
தற்போது துணிவு திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகர் அஜித்குமார் கலந்துக்கொள்வதாக வெளியான தகவல் உண்மையில்லை என அவரது மேலாளர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது .