ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.. அதைத்தொடர்ந்து வெளியான 'சொள' என்கிற படத்தில் பாலியல் பலாத்த்காரத்துகு ஆளாகும் பள்ளி மாணவியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர்.. இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உட்பட ஏழெட்டு விருதுகளை கைப்பற்றிவிட்டார்.
குறிப்பாக தற்போது தமிழில் ரீமேக்காகி உள்ள தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் ஒரிஜினலில் கதாநாயகியாக நடித்தவர் இவர்தான். அந்தப்படத்தில் குடும்பத்தில் உள்ள ஆண்களின் ஆதிக்கத்துக்கு அடங்கிப்போய் ஒரு கட்டத்தில் வீறுகொண்டு எழும் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் குடும்பப்பாங்கான வேடங்களிலேயே நடித்து வரும் நிமிஷா சஜயன் இந்த தீபவாளி தினத்தன்று போட்டோஷூட் ஒன்றை நடந்திள்ளார்.
அதில் கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் முதன்முறையாக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் நிமிஷா சஜயன். சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் நிமிஷாவா இப்படி என அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.