மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் நேரடி தமிழ்ப் படம் 'வாரிசு'. இப்படம் தமிழ்ப் படம்தான், தெலுங்கில் டப்பிங் தான் செய்கிறோம் என படத்தின் தயாரிப்பாளர் ஒரு 'ஸ்டிரைக்' பிரச்சினையின் போது தெரிவித்திருந்தார். அதை படத்தின் இயக்குனர் வம்சியும் தற்போது உறுதி செய்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் படத்தின் வியாபாரம் பற்றிய ஒரு கணக்கு கோலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் சுற்றி வருகிறது. அது உண்மையா, பொய்யா தெரியாது, வாட்சப் வதந்தியாகக் கூட இருக்கலாம். ஆனாலும், அந்த பெரிய கணக்கு இதுவரை விஜய் படங்களுக்கு நடக்காத ஒரு கணக்கு என்று சொல்கிறார்கள்.
படத்தின் தமிழக உரிமை, மற்ற மாநில உரிமை என 200 கோடி, வெளியாக உள்ள மொழிகளின் ஓடிடி உரிமை 60 கோடி, சாட்டிலைட் உரிமை 50 கோடி, ஹிந்தி உரிமை 25 கோடி, வெளிநாட்டு உரிமை 50 கோடி, படத்தின் இசை உரிமை 10 கோடி என சுமார் 400 கோடி வரை நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் விஜய்யின் சம்பளம் 120 கோடி, இதர செலவுகளுடன் சேர்த்து படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை இருக்கலாம் என்கிறார்கள்.
தியேட்டர்கள் உரிமை தவிர மற்ற உரிமைகளிலேயே போட்ட முதலீட்டை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார். அது போக 'டேபிள் பிராபிட்' கிடைக்கும். அதற்கு மேல் படம் நன்றாக இருந்துவிட்டால் தியேட்டர்கள் வசூல் மூலம் கிடைப்பது கூடுதல் லாபமாக இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். விஜய்யை வைத்து இதுவரையில் வியாபாரம் செய்த தமிழ்த் தயாரிப்பாளர்களைக் காட்டிலும், தெலுங்கில் தான் இதற்கு முன்பு தயாரித்த தெலுங்கு படங்களைக் காட்டிலும், இந்த 'வாரிசு' படம் மூலம் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அதிக லாபத்தைப் பெறும் வாய்ப்பு இருக்கிறதாம்.
தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சுற்றி வரும் இந்த கணக்கு உண்மையா, பொய்யா என்பது விரைவில் தெரிய வரும்.