புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? |
தமிழ் சினிமாவில் 2 கே கால கட்டங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜோதிகா. பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சூர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டு சில காலம் விலகியிருந்தார். குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அவருக்குப் பொருத்தமான நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நேற்று ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் மலையாளப் படமான 'காதல் - த கோர்' என்ற படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. மலையாள நடிகர் மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை ஜோ பேபி இயக்குகிறார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்க ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ஜோதிகா நடிக்கும் மூன்றாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்பு 'ராக்கிலிபட்டு, சீதா கல்யாணம்' ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வையை ரிடுவீட் செய்து, “முதல் நாளிலிருந்தே, இந்தப் படத்தின் ஐடியா, அடுத்தடுத்து நகர்வுகள் ஆகியவற்றை இயக்குனர் ஜோ பேபி மற்றும் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். மம்முக்கா, ஜோதிகா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோ” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் சூர்யா. இவரது வாழ்த்துக்கு மம்முட்டியும் நன்றி தெரிவித்துள்ளார்.