கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
சசிகுமார், ஹரிபிரியா நடிக்கும் 'நான் மிருகமாய் மாற' படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதனை கழுகு படத்தை இயக்கிய சத்திய சிவா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு முதலில் 'காமென்மேன்' என்று டைட்டில் வைக்கப்பட்டிதிருந்தது. அந்த டைட்டிலை இன்னொரு கம்பெனி பதிவு செய்து வைத்திருந்ததால் தற்போது 'நான் மிருகமாய் மாற' என மாற்றப்பட்டுள்ளது.
படம் குறித்து சசிகுமார் அளித்த பேட்டி: இந்த படத்தில் நான் சினிமா சவுண்ட் என்ஜீனியராக நடித்திருக்கிறேன். எனது மனைவியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். அமைதியான எங்கள் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்து விட, காமென் மேனாக இருந்த நான் எப்படி மிருக குணம் கொண்டவனாக மாறுகிறேன் என்பதுதான் படத்தின் கதை.
நான் இப்போது மதுரையில் வாழ்கிறேன். படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறேன். எனது படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மதுரை, தேனி பகுதியில் நடப்பதால் அங்கு இருப்பதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. எனது குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகளால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
கையில் இருக்கும் படங்களை வேகமாக முடித்து கொடுத்து விட்டு அடுத்த படம் இயக்கலாம் என்று இருக்கிறேன். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சரித்திர படத்தை இயக்குகிறேன். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. சு.வெங்கடேசன் எழுதிய ஒரு சரித்திர புனைவு கதையை படமாக்கும் திட்டம் இருக்கிறது. அது பெரிய பட்ஜெட் படம் என்பதால் இப்போதைக்கு அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. இனி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எனது பயணம் விறுவிறுப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.