குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை காவ்யா அறிவுமணி. சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்ட காவ்யா விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது குமரன் - காவ்யா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில், காவ்யா கடந்த மாதத்துடன் சீரியலை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அதை அதிகாரப்பூர்வமாக காவ்யாவும் தனது தெரிவித்துள்ளார். அதேசமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் முல்லை கேரக்டரில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்தது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் 'சிப்பிக்குள் முத்து' தொடரின் நாயகி லாவாண்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிப்பிக்குள் முத்து' ஒளிபரப்பான சில மாதங்களுக்குள்ளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் மிகக்குறுகிய காலத்திலேயே இடம்பிடித்த லாவண்யா முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் தான் என சின்னத்திரை ரசிகர்கள் பேசி வருகின்றனர்.