'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். அடுத்ததாக தற்போது தனுஷை வைத்து, கேப்டன் மில்லர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடங்களில் சார்பட்டா பரம்பரை வில்லன் வேம்புலி மற்றும் சுமேஷ் மூர் என்கிற நடிகரும் இணைந்துள்ளனர்.
கடந்த வருடம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் கள என்கிற படம் வெளியானது.. இந்த படத்தில் மிரட்டலாக வில்லனாக நடித்தவர் தான் இந்த சுமேஷ் மூர். சுமார் இரண்டுமணி நேரம் ஓடும் அந்த படத்தில் கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரம் இவருக்கும் டொவினோ தாமஸுக்கும் மிகப்பயங்கரமான தொடர் சண்டைக்காட்சி இடம்பெற்றது. இவ்வளவு முழுநீள சண்டைக்காட்சி இடம்பெற்ற முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். அந்த படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட சுமேஷ் மூர் தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் மூலமாக தமிழுக்கு வந்துள்ளார்.