மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்பு, சித்தி இத்னானி மற்றம் பலர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த வாரம் வெளியானது. இரு விதமான விமர்சனங்கள் இந்தப் படத்திற்காக வந்தது. அதே சமயம் சில யு டியூப் விமர்சனங்கள் படத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தது. அந்த விமர்சனங்களால் படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் காயப்பட்டுள்ளார் என்பது நேற்று நடந்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் வெளிப்பட்டது.
பட வெளியீட்டிற்கு முன்பு, “அதிகாலை காட்சி பார்க்க வருபவர்கள், இரவு நன்றாகத் தூங்கிவிட்டு வாருங்கள்,” என்று கவுதம் பேசியதும் வைரலாகி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வரை சென்றது. அவற்றிற்கும் சேர்த்து நேற்று தன்னுடைய பேச்சில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கௌதம்.
எந்த அளவுக்குப் பேசலாம், எவ்வோள பேசலாம்னு தெரியலை. ஏதாவது, பேசினா தப்பா ஆயிடுமோன்னு கூட தெரியலை. நல்லா தூங்கிட்டு வாங்கன்னு சொன்னதை எடுத்து, நல்ல பெருசா எடுத்து போட்டு, அதை அண்டர்லைன் பண்ணி, அதை சோஷியல் மீடியால எடுத்து போட்டு, தயாரிப்பாளரை இன்டர்வியூ எடுக்கப் போன இடத்துல, “என்ன சார் உங்க டைரக்டர் இப்படி சொல்லியிருக்காரேன்னு கேட்டு, அவரு எனக்கு போன் பண்ணி, என்ன சார் அப்படின்னு கேட்டு”, நான் பிளைட் எடுக்கப் போனால், எங்க அம்மா, டேய் சீக்கிரம் தூங்குடா, பிரஷ்ஷா போகலாம்னு சொல்வாங்க, அந்த ஒரு அர்த்தத்துல நான் சொன்னேன்.
அதனால, எந்த அளவுக்கு எதை சொல்றதுன்னு தெரியலை. நிறைய நல்ல விமர்சனங்கள் வந்தது, அவங்களுக்கு என் நன்றி. நெகட்டிவ் விமர்சனங்களும் வந்திருக்கு, அதை என் உதவியாளர்கள் படிச்சிட்டிருக்காங்க. அதுல கத்துக்கக் கூடிய விஷயங்களும் இருக்குன்னு நெனக்கறேன்.
அப்பப்ப, யோசிப்பேன். நிறைய படங்களுக்கு, நான் விமர்சனங்களைப் படிக்க மாட்டேன், ஒரு படத்தை விமர்சனத்தைப் படிக்காமத்தான் பார்ப்பேன். படத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் வேணா விமர்சனம் படிப்பேன். இன்னொருத்தரோட பிழைப்புல மண் அள்ளிப் போடற மாதிரி விமர்சனமா இதுன்னு யோசிப்பேன். ஒரு தவறான விமர்சனத்தால ஒரு படம் பாதிக்கப்படும். சில சமயம் அது நடக்காது, சில சமயம் நடக்கும்,” என வருத்தத்துடன் பேசினார்.