முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
“அப்டேட், அப்டேட், அப்டேட்,” என அதிகமாகக் கேட்பது அஜித் ரசிகர்கள் தான். அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த 'வலிமை' படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் எங்கெல்லாம் கேட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பிரதமர் மோடி வருகை, கிரிக்கெட் போட்டி என பல இடங்களிலும் 'வலிமை அப்டேட்' என குரல் எழுப்பி சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள்.
அஜித் தற்போது நடித்து வரும் அவரது 61வது படம் குறித்த அப்டேட்டையும் படக்குழு சரியாக வெளியிடுவதில்லை. படத்தின் அப்டேட்டை விட அஜித் வெளிநாடு சென்றது, பைக்கில் சுற்றுலா செல்வது போன்ற விஷயங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரப்பப்படுகிறது.
ஒரு பக்கம் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் பற்றிய அப்டேட்டும், விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 67 படம் பற்றிய அப்டேட்டுகளும் சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன. அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று பின்னர் தகவல் வெளியானது. கிறிஸ்துமஸ் விடுமுறையிலாவது வருமா அல்லது 2023 பொங்கலுக்காவது வருமா என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
படத்தின் அப்டேட் வெளிவராத காரணத்தால் '#WakeUpBoneyKapoor” என தற்போது டிரெண்டிங் செய்து வருகிறார்கள். “நேர்கொண்ட பார்வை, வலிமை, அஜித் 61” என தொடர்ந்து அஜித் நடிக்கும் படங்களுக்கு போனி கபூர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.