பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர் திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சற்று வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இதை தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அவர் ஏற்கனவே ஒரு பேட்டியின்போது இதுபற்றி கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் ஜெய்யும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. கொஞ்ச நேரமே வந்துபோகின்ற, அதேசமயம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் ஜெய்