இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் சைரன். ஜிவி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தநிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார். நேற்று நடைபெற்ற சைரன் படத்தின் பூஜய் மற்றும் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார்
மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த அனுபமா, தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்த்திகேயா-2 மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் அறிமுகமான அனுபமா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடித்திருந்தார். சைரன் தமிழில் அனுபமா நடிக்கும் மூன்றாவது படமாகும்.