என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் |
கடந்த வருடம் தமன்னா நடிப்பில் சீட்டிமார் மற்றும் மேஸ்ட்ரோ என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின. தெலுங்கில் வெளியான இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் இந்த வருடம் நிச்சயமாக தமன்னாவின் வருடமாக தான் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். அந்தவகையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் தமன்னா நடிப்பில் வெளியான எப்-3 படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சமீப காலத்தில் தமன்னாவின் படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் கூட இந்தியாவில் வெளியாக இருக்கும் ஹாலிவுட் படமான தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் ; தி ரிங்ஸ் ஆப் பவர் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது இருப்பை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார் தமன்னா.
இந்த நிலையில் ஹிந்தியில் தமன்னா நடித்துள்ள பப்ளிக் பவுன்சர் என்கிற படம் வரும் செப்-23ல் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை இப்போது துவங்கி உள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் மதூர் பண்டார்கருடன் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்துள்ளார் தமன்னா. இந்த படத்தில் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா.