பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தமிழ் திரை உலகில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் தனுஷ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத், விரைவில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனுசுடன் கைகோர்த்துள்ளார்.
இதுதவிர தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், ஹிந்தியில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் அதை மறுத்து விடுகிறார். இந்த நிலையில் முதன்முதலாக நிவின்பாலி நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதன் மூலமாக, அனிருத் மலையாள திரையுலகில் நுழைகிறார் என ஒரு தகவல் மலையாள வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. மம்முட்டி நடித்த தி கிரேட் பாதர் என்கிற படத்தை இயக்கிய ஹனீப் அதேனி என்பவர் நிவின்பாலியை வைத்து இயக்க உள்ள புதிய படத்தில் தான் அனிருத் இசையமைக்க உள்ளாராம். ஏற்கனவே நிவின்பாலி நடித்த மைக்கேல் என்கிற படத்தை ஹனீப் அதேனி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.