குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். கடந்த மூன்று வாரங்களாக வெளிநாட்டு சுற்றுபயணத்தில் உள்ளார். பாங்காங், லண்டன் என சுற்றுப் பயணம் செய்த பூஜா, தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். வழக்கமான சுற்றுலா பயணிகளை போன்று அவர் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியின் சாலைகளில் பைக் ஓட்டுவது, பேக்கரிகளில் குக்கீஸ் சாப்பிடுவது, பூங்காக்களில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் இன்னும் ஒரு வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே, அதையடுத்து நாடு திரும்பி தெலுங்கில் மகேஷ் பாபு, ஹிந்தியில் சல்மான்கானுடன் நடிக்கும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போகிறார்.