பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' |
தமிழில் 'விக்ரம் வேதா, கே 13, நேர் கொண்ட பார்வை, மாறா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவருடைய புகைப்படத்தைப் பதிவிட்டு பெயரை மட்டும் 'ஷ்ரத்தா தாஸ்' எனக் குறிப்பிட்டு பதிவிட்ட ஒரு சினிமா டுவிட்டர் கணக்கு மீது கடுப்பாகி பதிவிட்டுள்ளார்.
“8 லட்சம் பாலோயர்களைக் கொண்ட இந்தக் கணக்கை எந்த 'இன்டர்ன்' கையாண்டு வருகிறார்,” என கடுப்பாகப் பதிவிட்டுள்ளார். “என்னை ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்று அழையுங்கள், தாஸ், கபூர் அல்ல. பெரிய திரைப்பட கணக்குகளைக் கையாளும் இன்டர்களுக்கு இது மிகப் பெரிய விஷயம்தான். நீங்கள் பட்டம் வாங்காத அந்த ஜர்னலிசம் ஸ்கூலுக்காகவாவது இதைச் செய்யுங்கள்,” என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
“இன்ஸ்டாகிராமில் 'ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத்' என என் பெயரை மாற்றியுள்ளேன். இங்கேயும் அப்படி மாற்ற வேண்டும் போல. ரமா என்பது எனது அம்மாவின் பெயர். இனிமேல் எங்குமே என்னை நான் ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என உணர்வுடன் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் பேல உள்ளது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் என குறிப்பிட்டு செய்தி வெளியிடுவதற்குப் பதிலாக பாலிவுட் நடிகைகளான ஷ்ரத்தா தாஸ், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் பெயரில் டுவிட்டர் கணக்கு நடத்துபவர்கள் குழம்பி விடுகிறார்கள் போலிருக்கிறது.