அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மகாநடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனுராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கிய வேடத்தில் ஆபரின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகிகள் இருவருமே கலந்து கொண்டனர்.
ராஷ்மிகா இந்த படத்தில் நடித்தது குறித்து பேசும்போது, “இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இருவரின் கதையை சொல்லி படத்தை நகர்த்தி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரம் பற்றி என்னிடம் இயக்குனர் கூறியபோது இதை என்னால் செய்து விட முடியுமா என்கிற ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் கொடுத்த உற்சாகத்தில் இந்த படத்தில் நடித்துள்ளேன்” என்று கூறினார். இந்த படம் 70களில் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது