30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் |
எஸ்.பி.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ள படம் ‛ஜோதி'. ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா இயக்கி உள்ளார். இதில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா க்ரூப், குமரவேல், சாய்பிரியங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள படம். கடலூர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிறந்த குழந்தையை இன்னொரு பெண் திருடிச் சென்றார். டி.எஸ்.பி சாந்தி என்ற போலீஸ் அதிகாரி 2 மணிநேரத்தில் குழந்தையை மீட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. குழந்தை கடத்தலின் பின்னணியில் இருப்பது யார். எதற்காக கடத்துகிறார்கள் என்கிற உண்மைகளை படம் பேசப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.