மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடந்த 2018ம் ஆண்டு கிரான்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி, மே மாதங்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்லிசனை வீழ்த்தி சாதனை படைத்தார். ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியா தொடரிலும் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது செஸ் ஒலிம்பியா தொடரிலும் அவர் வெற்றி பெற வாழ்த்திய ரஜினிகாந்த், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதையடுத்து ரஜினிக்கு பிரக்ஞானந்தாவும் செஸ் போர்டு ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து, "மறக்க முடியாத நாள் இன்று. ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். எவ்வளவோ உயரங்களை அடைந்த போதும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி## என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.