லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் சிம்பு 40 வயதை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்யவில்லை. அவருக்கு ஏற்ற மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறியவர், மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடத்தில் சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் கடவுள் எழுதினால் தான் திருமணம் நடக்கும். நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மணப்பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும் என நான் வேண்டுகிறேன். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுள்களிடம் இதுகுறித்து பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார் டி.ராஜேந்தர்.