'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
நடிகை அமலாபால் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்துள்ள படம் கடாவர். இதில் அவரே சோலோ ஹீரோயினாக நடித்திருக்கிறார். மலையாள இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கி உள்ளார். அமலாபாலுடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் , பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெயராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.
இது ஒரு க்ரைம் திரில்லர் படம். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார். இதில் பத்ராவாக அமலாபால் நடிக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள இந்தப் படம் டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.