'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

நடிகர் தனுஷ் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . அடுத்தப்படியாக வருகிற ஆகஸ்ட் மாதத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் .
இதற்கிடையில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரேமேன் ஜூலை 22ம் தேதி வெளியாவதை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று படத்தின் புரொமோஷனுக்காக அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இப்படத்தின் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் இந்தியா வந்துள்ளனர். பாரம்பரிய உடையில் நடிகர் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தனுஷ் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .




