'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
சமீப மாதங்களில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் வித்தியாசமான வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரி வேடத்திலும், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விட்டார் மலையாள நடிகர் பஹத் பாசில்.
இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் பஹத் பாசில். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தனுஷுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான் நடித்ததாக கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் நான்கு குணசித்திர நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, வில்லனாக சைக்கோத்தனம் கலந்த ஷம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பஹத் பாசில். ஊருக்குள் பார்ப்பதற்கு நல்ல மனிதனாக காட்சியளிக்கும் அவர். குடும்பத்திலும் தனக்கு பிடிக்காதவர்களிடமும் சைக்கோத்தனமாக நடந்து கொள்ளும் காட்சிகளில் ரசிகர்களே எதிர்பாராத வகையில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரம் முதலில் தனுஷை மனதில் வைத்து தான் எழுதப்பட்டதாகவும், பின்னர் பட்ஜெட், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் அவரை இந்த படத்திற்குள் அழைத்து வர முடியவில்லை என்பதால் இறுதியாக தானே நடித்ததாகவும் கூறியுள்ளார் பஹத் பாசில். இந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து பஹத் பாசில் இந்தப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.