பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அடிப்படையில் பின்னணி பாடகியான இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அரபு மொழியில் ஒரு பாடலை பாடியுள்ளார் மம்தா. ஆனால் இது எந்த படத்திற்காகவும் அல்ல.. சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மம்தா மோகன்தாஸை மேடையில் பாடுமாறு விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
அப்போது மேடையேறிய மம்தா அரபு மொழியில் ஹிட்டான ஒரு பாடலை பாடி அரங்கில் இருந்தோரின் கைதட்டலை அள்ளினார். அதேசமயம் இவர் பாடிய இந்த பாடல் வீடியோ இதுவரை எங்கேயும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் மம்தா மோகன்தாஸின் ரசிகர் ஒருவர், அவர் மேடையில் பாடிய அந்த வீடியோவை சோசியல் மீடியா மூலமாக அவருக்கு பகிர்ந்துள்ளார்.
இந்த பாடல் கிடைத்த மகிழ்ச்சியில், “இதுநாள் வரை இந்த பாடல் கிளிப்பிங் எங்கேயாவது கிடைக்காதா என தேடிக்கொண்டிருந்தேன். ரசிகர் ஒருவர் மூலமாக அது என்னை தேடி வந்தபோது மிகப்பெரிய அளவில் ஆச்சரியமடைந்தேன். ஏனென்றால் நான் பாடியது என்னுடைய பேவரைட் அரபு பாடல்களில் ஒன்று. அரபு உலகம், கலாச்சாரம், உணவு, மொழி எல்லாமே எனது இதயத்துக்கு மிக நெருக்கமான ஒன்று என்று கூறியுள்ளார் மம்தா மோகன் தாஸ்.
மம்தாவை பொருத்தவரை அவர் மலையாளி ஆக அறியப்பட்டாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அரபு நாடுகளில் ஒன்றான பக்ரைனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.