ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலுக்கு 30 வருட பெரும் முயற்சிக்கு பிறகு திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். சோழர்கால வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை அமரர் கல்கி எழுதியது என்றாலும் சோழர்களின் வரலாற்றை மணிரத்னம் ஆய்வு செய்து இந்த படத்தின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்.
அதே சமயம் இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் நெற்றியில் நாமம் அணிந்திருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது வழக்கறிஞர் செல்வம் என்பவர் இது குறித்து மணிரத்தினம் மீதும் விக்ரம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், சோழர்கள் நெற்றியில் நாமம் அணிவதில்லை என்றும் அவர்களது கதாபாத்திரத்தை இதில் தவறாக சித்தரித்துள்ளார்கள் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தை தனக்கு பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் அதில் வேறு ஏதேனும் காட்சிகள் இதுபோன்ற இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே இந்த படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம் விக்ரம் நடித்துள்ள கரிகாலன் கதாபாத்திரம் ஒரு மாவீரன் மற்றும் இளவரசன் கதாபாத்திரம். அவர் போருக்கு கிளம்பும்போது வெற்றி திலகமாக குங்குமம் தரித்து செல்வது போன்று தான் அவரது புகைப்படம் இருக்கிறது. இதில் ஏன் குறை கண்டுபிடிக்கிறார்கள் என்று பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.