தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம் லைகர். இதில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவரது பயிற்சியாளராக உலக குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் விஜய் தேவரகொண்டா நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இது கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
"அக்டி பக்கடி..." என தொடங்கும் இந்த பாடல் பார்ட்டி பாடலாக அமைந்துள்ளது. தேவ் நேகி, பாவ்னி பாண்டே மற்றும் லிஜோ ஜார்ஜ் ஆகியோர் பாடலின் இந்தி பதிப்பை பாடியுள்ளனர். நடன அமைப்பினை பாபா பாஸ்கர் செய்துள்ளார். தெலுங்கில், அனுராக் குல்கர்னி மற்றும் ரம்யா பெஹாரா இணைந்து பாடியுள்ளனர், தமிழில் சாகர் மற்றும் வைஷ்ணவி கொவ்வூரி ஆகியோர் பாடியுள்ளனர். விஷ்ணு வர்தன் மற்றும் சியாமா மலையாளத்தில் பாடியுள்ளனர், கன்னடத்தில் சந்தோஷ் வெங்கி மற்றும் சங்கீதா ரவிச்சந்திரநாத் பாடியுள்ளனர்.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம், ஆகஸ்ட் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவருகிறது.