சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' |
நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு இல்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் இதை விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் மறுத்துள்ளார்.
விக்ரமின் மேலாளர் கூறியிருப்பதாவது : விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம்
இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விக்ரமுக்கு
மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம்.
இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை
வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார்.
இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்படுவார். இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்படும் என்று நம்புகிறோம்'' என்றார்.
மருத்துவமனை அறிக்கைவிக்ரமின் மேலாளர் கூறியது போன்று விக்ரம் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விக்ரமிற்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.