மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் கடுவா. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரித்விராஜ் நடித்துள்ள மாஸ் ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தில் கடுவாக்குன்னல் குறுவச்சன் என்கிற காட்டு ராஜாவாக நடித்துள்ளார் பிரித்விராஜ். அவரை வேட்டையாட துடிக்கும் போலீஸ் அதிகாரியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
வரும் ஜூலை 7ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் விவேக் ஓபராய், இந்த படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுநாள் வரை இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்றே சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது, தான் வில்லன் இல்லை என்கிற ரகசியத்தை உடைத்துள்ளார் விவேக் ஓபராய்.
இதுபற்றி அவர் கூறும் போது, “இந்தப்படத்தில் ஜோசப் சாண்டி ஐபிஎஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. ஜோசப் ஒரு கண்ணியமான, படித்த, உன்னதமான மனிதன். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்கு செல்ல விரும்பும் நபர். அவர் ஒரு நல்ல தந்தை, நல்ல கணவர் மற்றும் ஒரு அற்புதமான மகன். மொத்தத்தில் இந்த சமுதாயத்தின் தூண்.
ஆனால் அவனுக்குள் உள்ள ஈகோவும் அதிகாரமும் சேர்ந்து தேவையில்லாமல் அவனை கெட்டவன் ஆக்குகின்றன. குருவச்சனுடனான (பிரித்விராஜ்) பிரச்சனையை அழாக பேசி தீர்த்திருக்க முடியும்.. ஆனால் அவனது ஈகோவும் அந்த முரட்டுத்தனமும் தான் அவனை வில்லனாக மாற்றிவிட்டது” என தனது கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார் விவேக் ஓபராய்.